முல்லைத்தீவு நாயாற்று கடல் பகுதியில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபையில் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றபோது, ரவிகரன் இந்தப் பிரேரணையை கொண்டு வந்தார்.
அக்கடற்பரப்பில் மீன்பிடிக்க தென்பகுதி மீனவர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பல மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர் என ரவிகரன் தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரேரணைக்கு வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவுக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.