மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் புகைப்படங்கள், டீசர், மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோவை ஏப்ரல் 4-ந் தேதி வெளியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று நடு இரவு 12 மணிக்கு மின் வெளியில் இப்படத்தின் பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நடுஇரவில் ஒரு ஆடியோ வெளியிடுவது தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும், படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தின் இசை வெளியீட்டிற்கு புது உத்தியை கையிலெடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.