இலங்கை கிரிக்கெட் தேர்வாளர் குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.
விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அவர், அனுப்பிவைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரிய கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார் .