யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதனால் யேமனில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து தகவல்களை 0112323015 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
யேமனில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்கள் மூடப்பட்டு நாட்டில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.