இது நம்ம ஆளு படத்தின் இசையமைப்பாளர் யார்?

பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம் இது நம்ம ஆளு. சிம்பு, நயன்தாரா காதல் பிரிவிற்கு பிறகு இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

anirudh_kularasan

இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தற்போது வந்த தகவலின் படி இது நம்ம ஆளு படம் தள்ளிப்போவதற்கு குறளரசன் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அவர் இதுவரை படத்திற்கு இரண்டு பாடல்கள் தான் போட்டிருக்கிறாராம். அப்பாடல்கள் இயக்குனருக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால், தற்போது இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் இந்த ஏற்பாடு எல்லாம் மறைமுகமாக நடக்கிறது என்பது கூடுதல் தகவல் .

Related Posts