படத்துக்கு பெயர் வைப்பதிலிருந்தே தங்களின் கிரியேட்டிவிட்டியை காட்ட ஆரம்பிக்கிறார்கள் இயக்குனர்கள். பல நேரம் இந்த பெயர் வைக்கும் விஷயத்திலேயே பெரும்பாலானவர்களின் கிரியேட்டிவிட்டி கரைந்துவிடுகிறது.
புலி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவரும் நட்டி என்கிற நடராஜன் சுப்ரமணியன் அடுத்து இரு இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அத்துடன் நான்கு படங்களில் நடிக்க வாய்ப்பும் வந்திருக்கிறது.
இந்த நான்கில் ஒரு படத்தின் பெயர், குண்டு இட்லி கேர் ஆஃப் கும்பகோணம். இன்னொரு படம், உத்தரவு மகாராஜா.
விரைவில் இவ்விரு படங்களின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.