எந்த நாட்டுடனும் முரண்படமாட்டோம்! – ஜனாதிபதி

இலங்கை, பொருளாதார வளர்ச்சிப் போக்கில் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி, உலகில் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்புறவை நிலைநிறுத்தும். எந்த நாட்டுக்கும் எதிராக நாம் முரண்பாட்டை ஏற்படுத்தமாட்டோம்.’ – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

mayithiri -my3-china

சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால, அங்கு வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது முதலாவது சீனப் பயணம், மிகவும் வெற்றிகரமாக இருக்கின்றது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, இப்பயணத்தின் மூலம், சீன அரசின் மேலதிக ஆதரவுகளைப் பெறலாம் என நினைக்கின்றேன்.

மருத்துவ சிகிச்சை, வேளாண்மை முதலிய துறைகளிலான ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் சீனாவும் இலங்கையும் கையொப்பமிட்டுள்ளன.

இலங்கை, பொருளாதார வளர்ச்சிப் போக்கில் அணிசேராக்கொள்கையைப் பின்பற்றி, உலகில் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்புறவை நிலைநிறுத்தும்.

எந்த நாட்டுக்கும் எதிராக, முரண்பாட்டை நாம் ஏற்படுத்த மாட்டோம். இலங்கையின் வளர்ச்சிக்கு உலகில் பல்வேறு நாடுகளின் நட்பார்ந்த ஆதரவு தேவைப்படுகின்றது. சர்வதேச நிலைமையில், சீன அரசுடனான ஒத்துழைப்பு இலங்கைக்கு மிகவும் முக்கியமாக இருக்கின்றது – என்றார்.

Related Posts