Ad Widget

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விவகாரம்: உள்ளக விசாரணை குழு நியமனம்

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்ளக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranil

கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து இலவச wi-fi சேவை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா கிரிகெட்டுக்கு இடைக்கால விசாரணை குழு அமைக்கப்பட்டது ஏன்? ஸ்ரீ லங்கா கிரிக்கெட், பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு 500 மில்லியன் ரூபாவை வழங்கவேண்டும். அதனை கொடுப்பதற்கு பணம் இல்லையாயின் நிதியமைச்சரே அதனை செலுத்த வேண்டும்.

எங்களுடைய கிரிக்கெட் போட்டிகளின் (ஒளிபரப்பு)க்கு கிடைக்கவேண்டிய முழு தொகையை வாங்காமல் சி.எஸ்.என்க்கு ஒளிபரப்பும் உரிமையை ஏன் வழங்கப்பட்டது. அது பெரும் பிரச்சினையாகும். ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடி மற்றும் முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதற்கே இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் பணம் கொடுத்தது. எனினும் அந்த நிதி, பொறியியல் கூட்டுதாபனத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Related Posts