இரட்டை குடியுரிமைக்கு இன்றுதொடக்கம் விண்ணப்பிக்கலாம்!

இலங்­கையில் நான்கு வரு­டங்­க­ளுக்கு பின்னர் இன்று முதல் இரட்டை குடி­யு­ரிமை விண்­ணப்­பங்­களை மேற்­கொள்ள முடியும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொது­மக்கள் ஒழுங்­குத்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க இதனை அறி­வித்­துள்ளார். இரட்டை குடி­யு­ரி­மைக்­காக இது­வரை சுமார் 300 பொது­மக்கள் விண்­ணப்­பித்­துள்­ளனர். இவர்­களின் விண்­ணப்­பங்­களும் புதிய விண்­ணப்­பங்­க­ளுடன் பரி­சீ­லிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார்.

இரட்டை குடி­யு­ரிமை விண்­ணப்­பங்­க­ளின்­போது வயது வந்­த­வர்­க­ளுக்கு 250, 000 ரூபா அற­வி­டப்­படும். முன்னர் இது 5 இலட்­ச­மாக இருந்­தது. 22 வய­துக்கு குறைந்­த­வர்­க­ளுக்கு 50ஆயிரம் ரூபா அறவி­டப்­ப­ட­வுள்­ளது.

இந்­த­நி­லையில் இரட்டை குடி­யு­ரி­மைக்­கான தகு­திகள் தொடர்­பான விப­ரங்கள் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­கள இணை­யத்­த­ளத்தில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

ஏற்­க­னவே இரட்டை குடி­யு­ரிமை பெற்­றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்­போது விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. இதன்­போது எவ­ரா­வது குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts