ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
16 அமைச்சர்களில் ஐவர் இராஜாங்க அமைச்சர்கள் எனவும், 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
01. ஏ.எச்.எம்.பெளசி – அனர்த்த முகாமைத்துவம்
02. எஸ்.பி.நவீன் – தொழில் மற்றும் தொழில் உறவுகள்
03. பியசேன கமகே – திட்ட முகாமைததுவ திறன் அபிவிருத்தி
04. சரத் அமுனுகம – ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி
05. எஸ்.பி.திஸநாயக்க – கிராமிய பொருளாதார அபிவிருத்தி
06. ஜனக பண்டார தென்னக்கோன் – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
07. பீலிக்ஸ் பெரேரா – விசேட திட்டங்கள்
08. மஹிந்த யாப்பா – நாடாளுமன்ற அலுவல்கள்
09. றெஜினோல்ட் கூரே – சிவில் விமானப் போக்குவரத்து
10. விஜிதமுனி சொய்சா – நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவம்
11. மஹிந்த அமரவீர – கடற்றொழில் மற்றும் நீரியல் வளம் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ராஜாங்க அமைச்சர்களாக,
01. பவித்திரா வன்னியாராச்சி – சுற்றுச் சூழல்
02. ஜீவன் குமாரதுங்க -தொழில் மற்றும் தொழில் உறவுகள்
03. மஹிந்த சமரசிங்க – நிதி
04. சி.பி. ரட்நாயக்க – பொது நிர்வாகம்
05. டிலான் பெரேரா – வீடமைப்பு மற்றும் சமுர்த்தி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
பிரதி அமைச்சர்களாக,
01. திஸ்ஸ கரலியத்த – புத்த சாசனம்
02. தயாஸ்ரீத திசேரா -கடற்றொழில் மற்றும் நீரியல் வளம்
03. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள்
04. லக்ஷ்மன் செனவிரத்ன – அனர்த்த முகாமைத்துவம்
05. லக்ஷ்மன் யாப்பா – சிவில் விமானப் போக்குவரத்து
06. லலித் திஸாநாயக்க – நீர்ப்பாசனம்
07. ஜெகத் புஷ்பகுமார – பெருந்தோட்டம் மற்றும் கைத்தொழில்
08. லசந்த அழகியவண்ண – கிராமியப பொருளாதார அபிவிருத்தி
09. சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே – ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி
10. ஷாந்த பண்டார – மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.m