யாழ்.போதனா வைத்தியசாலையின் பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் புதிய தொலைபேசி இலக்கம் 0212217756 என மாற்றப்பட்டுள்ளதாக பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய அதிகாரி தாரணி குருபரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
வடமாகாணத்தில் பாலியல் தொற்று நோய் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு மாதத்துக்கு 50 தொடக்கம் 100 வரையானவர்கள் பரிசோதனை மேற்கொள்வதற்கு வருகின்றனர்.
நம்பகத்தன்மை பேணப்படுதல், விழிப்புணர்வு நடவடிக்கைகள், இலவச இரத்தப் பரிசோதனை, சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள பலர் பரிசோதனை செய்து கொள்வதற்கு வருகின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது 15 எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
பாலியல் தொற்று நோய்களில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சை பிரிவுக்கு (33ஆம் அறை) காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை இரத்தப்பரிசோதனை மற்றும் மற்றைய பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.