பேய் படத்தில் நடிக்கும் சிபிராஜ்

சிபிராஜ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. இதில் சிபிராஜிற்கு ஜோடியாக அருந்ததி நடித்திருந்தார். மேலும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்தார். சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.

sibi-saththeyaraj

நாய்கள் ஜாக்கிரதை வெற்றிக்குப் பிறகு சிபிராஜ் நடிக்க இருக்கும் படம் ‘ஜாக்சன் துரை’. இப்படத்தை ‘பர்மா’ படத்தை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். விரைவில் தொடங்கவுள்ள இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் நடிகர் நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

100 வருடமாக ஒரு பேயிடம் சிக்கி தவிக்கும் கிராமத்தை காப்பாற்ற ஒரு போலீஸ் அதிகாரி அந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்கள் படமாக்கப்பட உள்ளன.

விபின் சித்தார்த் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷனஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் இப்படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.

Related Posts