தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற நடிகைகளில் ஒருவர் சுஹாசினி மணிரத்னம்.
பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான சுஹாசினி ஐரோப்பாவில் உள்ள “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நியமிக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் அந்த நாட்டின் தூதுவரான சாம் ஸ்ரீநர் பேசுகையில், திருமதி சுஹாசினி மணிரத்னம் அவர்களை தங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராக நியமித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் சுஹாசினி மணிரத்னம் அவர்கள் 350 படங்களுக்கும் மேல் நடித்த ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, அவர் பெண்கள் நலனிலும் ஆர்வம் கொண்ட பன்முக சிந்தனையாளர் எனவும் கூறினார்.
பதவியேற்ற பின் நன்றி தெரிவித்த சுஹாசினி, தான் பிறந்த பரமக்குடி என்ற சிறிய ஊருடன் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்கை ஒப்பிட்டு தனக்கு அளித்த பொறுப்பை செவ்வனே செய்வேன் என்று உறுதியளித்தார்.
ஒரு நடிகர் மற்றொரு நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.