இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி இன்று (18) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்று வருகிறது.
உலகக் கிண்ணத் தொடரில், முதலாவது காலிறுதிப் போட்டி இன்று பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றது. முன்னதாக இடம்பெற்ற லீக் சுற்று கடந்த 15ம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதன்படி காலிறுதிச் சுற்றுக்கு இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று முதலாவது காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
இதில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதலில் ஈடுபட்டுள்ளன. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி சற்றுமுன் வரை இரண்டு இலக்குகளை இழந்து 55 ஒட்டங்களை 16 ஒவர்கள் நிறைவில் பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணியில் தரிந்து கௌஷால் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். காயமடைந்த இலங்கை அணி வீரரான ரங்கன ஹேரத்துக்கு பதிலாக இவரை அணியில் இணைத்துக் கொள்ள ஐ.சி.சி அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணி வீரர்கள் வருமாறு
1.லகிரு திரிமன்னே, 2. திலகரட்ண டில்ஷான், 3. குமார் சங்கக்காரா, 4. மஹேல ஜயவர்த்தன, 5. குசேல் பெரேரா, 6. அஞ்சலோ மத்யூஸ், 7. திஸாரா பெரோரா, 8. சீக்குகே பிரசன்னா/ ரங்கண ஹேரத், 9. நுவான் குலசேகர, 10. லசித் மலிங்க, 11. சுரங்க லக்மால்/ துஷ்மந்த சமீர