மணிரத்னம் – ரஹ்மான் என்றாலே இளமை துள்ளும் பாடல்கள் உறுதி.
அவர்களின் கூட்டணியில் வந்த அலைபாயுதே, கடல் போன்ற பாடல்கள் ரசிகர்களை இசையில் கிறங்கடிக்க செய்தது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இவர்கள் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவிருக்கும் படம் ஓகே காதல் கண்மணி.
இப்படத்தின் சிங்கிள் ட்ராக் க்கான மெண்டல் மனதில் பாடலை சரியாக நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. இளமை துள்ளும் இப்பாடலை கேட்டவுடன் ரசிகர்களுக்கு கவர்ந்து விட்டது, இப்பாடல் திரும்ப திரும்ப கேட்கும் விதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.