விஜய்யின் புலி படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தகவலை நாம் அறிந்து வருகிறோம். தற்போது படத்தின் படப்பிடிப்பில் என்ன நடந்து வருகிறது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
கேரளாவில் வாகாமாம் என்ற இடத்தில் ஸ்ருதிஹாசன், விஜய் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படப்பிடிப்பு செய்து வருகின்றனராம்.
இந்த காதல் காட்சிகளை படமாக்குவதற்காக கலை இயக்குனர் ஒரு அழகான மார்க்கெட் செட்டை உருவாக்கியுள்ளாராம். இதில் விஜய், ஸ்ருதிஹாசன், தம்பி ராமைய்யா இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம்.