பண்டாரவளையில் நிலச்சரிவு 17 குடும்பங்கள் இடம்பெயர்வு

பண்டாரவளை – அம்பதன்டேகம – கலஹிட்டியாவ பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு காரணமாக 17 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

25 அடி உயரமுடைய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய, அப்பகுதியில் வாழ்ந்த 17 குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் அவர்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இந்த நிலச்சரிவினால் தெய்வாதீனமாக உயிர், சொத்துச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Related Posts