ரஜினியின் புது படத்தை இயக்க 7 டைரக்டர்கள் போட்டி

ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். சமீபத்திய படங்களான கோச்சடையான், லிங்கா இரண்டுமே எதிர் பார்த்த வசூலை ஈட்ட வில்லை. எனவே அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார். புதிய படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க போவதாக கூறப்படுகிறது.

rajinikanth

இருவரும் நேரில் சந்தித்து பேசி இதை முடிவு செய்துள்ளனர். ஆஸ்கார் ரவிச்சந்திரன் ‘ஐ’ படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தார்.

எனவே ரஜினி படத்தையும் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் எடுத்து பெரிய அளவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.

முன்னணி இயக்குனர்கள் பலரிடம் கதைகள், கேட்கப்பட்டு உள்ளதாம். விரைவில் யார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. தற்போது ரஜினி படத்தை இயக்கும் போட்டியில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, பி.வாசு, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ் ஆகிய 7 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

ஷங்கர் ஏற்கனவே ரஜினியை வைத்து எந்திரன், சிவாஜி படங்களை இயக்கியுள்ளார். அவை வெற்றி பெற்றுள்ளன. மணிரத்னம் தளபதி படத்தை எடுத்தார். அதுவும் வெற்றிகரமாக ஓடியது. பி.வாசு சந்திரமுகி படத்தை இயக்கினார். அப்படம் வசூல் சாதனை படைத்தது. டைரக்டர் ஹரி ‘சிங்கம், சாமி, உள்ளிட்ட ஹிட் படங்கள் எடுத்துள்ளார்.

ரஜினிக்கான கதையொன்று தன்னிடம் இருப்பதாக கூறி வருகிறார். இதுபோல் ஏ.ஆர்.முருகதாசும் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி போன்ற ஹிட் படங்களை எடுத்து முன்னணி டைரக்டராக இருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா படம் மூலம் பிரபலமானார். இந்த படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து போய் கார்த்திக் சுப்பராஜை நேரில் அழைத்து பாராட்டினார். இவர்களில் யார் ரஜினி படத்தை இயக்குவார்கள் என்பது ஓரிரு வாரத்தில் தெரியவரும் என்கின்றனர்.

Related Posts