அநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்!

வெளிநாடுகளுக்குச் சென்று காணாமற் போனவர்களின் உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அநாமதேய நபர்கள் காணாமற் போனோரின் பெயருக்கு பெரும் தொகைக்கான காசோலை வந்துள்ளதாக கூறி ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கின்றன.

சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனமாகச் செயற்படுமாறு அறிவுறுத் தப்படுகிறது.

கடந்தவாரம் இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கணக்கொன்றுக்கு 25ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டால் தங்களுக்குரிய 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபா காசோலை வைப்பிலிடப்படும் என்று தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சிடம் தொடர்பு கொண்ட போது தொலைபேசித் தகவல் பொய்யானது எனத் தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் டோகா நாட்டுக்குச் சென்று காணாமற் போயுள்ளதால் அவரது உறவுகள் நீண்ட காலமாகத் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் காணாமற் போனவரின் மகளின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்து கதைத்த போது காணாமற் போன குறித்த நபரின் பெயருக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபா இழப்பீட்டுத் தொகையாக அந்த நாட்டிலிருந்து காசோலை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த காசோலையை தங்களது கணக்கில் வைப்பிலிட வேண்டு மாயின் 25ஆயிரம் ரூபாவை வங்கி இலக்கமொன்றுக்கு அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டது.

தனது கணவர் வந்ததும் இவ்விடயம் பற்றி கதைத்து விட்டு தொலை பேசியில் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தப்பெண் கணவருக்குத் தகவல் தெரிவிக்கவே அவர் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் தொடர்பு கொண்ட போது காணாமற் போனவர் தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் எந்தவொரு இழப்பீட்டுத் தொகையும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் காலை குறித்த அநா மதேய நபருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தொலை பேசி செயலிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான அநா மதேய அழைப்புக்களை நம்பி ஏமாறவேண்டாம் என அறிவுரை கூறப்பட்டுள்ளது.

Related Posts