ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு ‘36 வயதினிலே’ என்று சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
திருமணத்துக்கு பிறகு ஜோதிகா நடிக்கவில்லை. நல்ல கதைகள் அமைந்தால் அவர் மீண்டும் நடிப்பார் என்று சூர்யா கூறி வந்தார். இந்த நிலையில் மலையாளத்தில் மஞ்சுவாரியார் நடித்து வெற்றிகரமாக ஓடிய ’ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் கதை இருவருக்கும் பிடித்து போனது.
இந்த படத்தை தனது சொந்த பட நிறுவனமான 2 டி புரொடக்ஷன்ஸ் சார்பில் தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கவும் மஞ்சு வாரியார் கேரக்டரில் மனைவி ஜோதிகாவை நடிக்க வைக்கவும் சூர்யா விரும்பினார். ஜோதிகாவும் நடிக்க சம்மதித்தார்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த படத்துக்கு இதுவரை பெயர் வைக்கப்பட்டாமல் இருந்தது. ‘36 வயதினிலே’ என்ற பெயரை பரிசீலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.
இந்த நிலையில் இப்படத்துக்கு ‘36 வயதினிலே’ என்று பெயர் வைத்து இருப்பதாக சூர்யா தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த படத்தில் ஜோதிகாவின் கெட்டப் படத்தையும் வெளியிட்டார்.
சூர்யா நேற்று முதல் டுவிட்டரில் இணைந்தார். இரண்டு மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் டுவிட்டரில் அவரை பின்பற்றினர்.