Ad Widget

‘போக்கோ ஹராம் கடுமையான நெருக்கடியில்’ – நைஜீரியா

இஸ்லாமிய அரசு இயக்கத்தின் வழியில் பற்றுறுதி கொண்டுள்ளதாக போக்கோ ஹராம் அறிவித்திருப்பது, அந்த இயக்கத்தினர் நெருக்கடியை சந்தித்துவருவதையே காட்டுகின்றது என்று நைஜீரிய அரசாங்கம் கூறியுள்ளது.

boko_haram_abubakar_shekau

நைஜீரிய மற்றும் பிராந்திய இராணுவப் படைகளின் தாக்குதல்களின் விளைவாக, போக்கோ ஹராம் ஆயுததாரிகள் தமது வல்லமைகளை இழந்து, கடுமையான சேதங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

போக்கோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷேக்காவ், சனிக்கிழமை இணையத்தில் விடுத்துள்ள ஒலிச் செய்தியொன்றில், ஐஎஸ் ஆயுததாரிகளின் வழியில் பற்றுறுதி கொண்டுள்ளதாக அறிவித்தார்.

நைஜீரிய அரசுக்கு எதிரான தங்களின் போராட்டத்திற்கு உதவிகோரும் முயற்சியே இந்த அறிவிப்பு என்று நைஜீரிய அரசாங்கத்தின் பேச்சாளர் கூறுகின்றார்.

Related Posts