திரையுலகிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரபலத்தின் இழப்பு

ஆடுகளம் படத்திற்காக சிறந்த எடிட்டர் என தேசிய விருது வாங்கியவர் கிஷோர். இவர் பல ஹிட் படங்களில் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார்.

kishore_edior

சமீபத்தில் இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மூளையில் இரத்தம் உறைந்ததால் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் மூளை செயலிழந்தது. இதனையடுத்து அவரின் உடலுறுப்புகளை தானம் செய்யவுள்ளனர். இவரின் இழப்பு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அவரது உடல் அவரின் ஸ்டூடியோவில் வைக்கப்படவுள்ளது. இவருக்கு இரண்டு மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts