கமல்ஹாசன் படைப்புகள் எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்தே இருக்கும். கடந்த வாரம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற உத்தம வில்லன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடம் கமல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், உத்தம வில்லன், விஸ்வரூபம் -2 , பாபநாசம் ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ்க்கு ரெடி ஆகியுள்ளன.
இந்நிலையில் கமல் தனது அடுத்த படத்தை நோக்கி திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் கூட மொரீசியஸ் தீவுகளுக்கு சென்று அடுத்து படத்துக்கான படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்து உள்ளாராம்.
அவர் அடுத்து எடுக்கும் கதை ஒரு உலகத்தரம் வாய்ந்த உண்மை கதை என்கிறார்கள்.
அதாவது ராஜ்குமாரின் பிரபல நாவலான ‘வெல்வெட் குற்றங்கள்’ நாவலையும், மலேசிய விமானம் தொலைந்துபோன மர்மத்தையும் பின்னி ஒரு கதையாக எடுக்க உள்ளதாகவும் அதில் கமல் நடிக்க உள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.