தேர்தலுக்கு வருவீர்களா என்று அப்பாவிடமே கேளுங்கள் – நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையின் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித்த ராஜபக்ஷ, பொலிஸ் குற்றவியல் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை 8.40க்குச் சென்றார்.

இதன்போது, யோஷித்தவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தனர். வாக்குமூலத்தை வழங்கிவிட்டு, அவ்விருவரும் இன்று முற்பகல் 10.40க்கு பொலிஸ் குற்றவியல் பிரிவிலிருந்து வெளியே வந்தனர்.

இதன்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, ‘யோஷித்த குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். நாம் குற்றமற்றவர்கள். அதனாலேயே, பொலிஸ் அழைப்பு கிடைத்தவுடன் வந்தோம்’ என்றார்.

இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாரா?’ என்று ஊடகவியலாளர் ஒருவர், நாமல் எம்.பி.யிடம் கேள்வி எழுப்பிய போது, ‘அதுபற்றி அப்பாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டார்.

Related Posts