மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.