நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் குழு ‘ஏ’ இற்கான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 32.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது.
ஆஸ்திரேலிய வீரர்கள் எவரும் 50 ஓட்டங்களைக் கூடக் கடக்கவில்லை. நியூஸிலாந்து வீரர் போல்ட் சிறப்பாகப் பந்து வீசி ஆஸி அணி வீரர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 10 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
152 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 23.1ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
பிரெண்டன் மெக்கலம் 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்றார்.
ஸ்ராக் 9 ஓவர்கள் பந்து வீசி 28 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய நியூஸிலாந்து அணியின் வீரார் போல்ட் தெரிவானார்.