உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
ஹாலிவுட் திரையுலகில், மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக, பல்வேறு நாடுகளிலிருந்து திரைநட்சத்திரங்கள் அங்கு குழுமியிருந்தனர்.
தி கிராண்ட் புத்தா பெஸ்ட் ஓட்டல் என்ற திரைப்படம், காஸ்ட்யூம் டிசைன் , மேக்அப் மற்றும் ஹேர்ஸ்டைலிங் உள்ளிட்ட துறைகளில் 4 விருதுகளை பெற்றுள்ளது.
சினிமா போட்டோகிராபி விருது பேர்ட்மேன் படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருது விப்ளாஸ் என்ற படத்தில் நடித்த ஜே.கே. சிம்மன்ஸ்க்கு வழங்கப்பட்டது.
சி.ஐ.ஏ. முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடென் குறித்த “சிட்டிசன்4” படம், சிறந்த டாக்குமெண்டரி படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைநட்சத்திரங்களுக்கு முன்னதாக, சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இப்பூவுலகை விட்டு மறைந்தாலும், தங்களது பணியால், இன்னும் நெடுங்காலம் வாழ இருக்கின்ற மெரைல் ஸ்டீரிப், ஜெனிபர் ஹட்சன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.