சிவா படம், அஜீத்துக்கு இரண்டு வேடங்கள்?

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு இரு வேடங்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Ajith-Siruthai-Siva

வீரம் படம் அஜீத்தின் நகர்ப்புற படங்களிலிருந்து வித்தியாசமாக அமைந்தது. அஜீத்தால் இனி கிராமத்து கதையில் நடிக்க முடியுமா? அப்படியே நடித்தாலும் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்விகளுக்கு வீரம் நேர்மறையான பதிலாக அமைந்தது. அந்த மகிழ்ச்சியில், அப்போதே மீண்டும் சிவா இயக்கத்தில் நடிப்பேன் என்றார் அஜீத். தற்போது ஸ்கிரிப்ட் தயார்.

கிராமம், நகரம் என்று ஒருவேறு பகுதிகளில் கதை நடப்பதாக திரைக்கதை அமைத்துள்ளாராம் சிவா. கிராமத்து அஜீத், நகரத்து அஜீத் என அஜீத்துக்கு இரு வேடங்கள். அஜீத்துக்கு இரு வேடங்கள் என்பதால்தான் இரு ஹீரோயின்கள் என்றும் கூறப்படுகிறது.

ஏப்ரல் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Related Posts