நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற பாகிஸ்தான் – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையேயான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் குழு ‘பி’ இற்கான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 150 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கந்தியத் தீவுகள் அணி 50ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்றது.
அன்ட்ரூ றுசேல் 13 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பெளண்டரிகள் அடங்கலா 42 ஓட்டங்களைப் பெற்றார். சொஹைல் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
310 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஆரம்பத்திலேயே பாக்.அணி 4 விகெட்டுக்களை இழந்திருந்தது. ஒரு கட்டத்தில் ஓர் ஓட்டத்துக்கு 4 விக்கெட்டுக்களை அந்த அணி இழந்த நிலையில் இருந்தது.
உமர் அக்மல் 59 ஓட்டங்களையும், மக்சூத் 50 ஓட்டங்களையும், அப்ரிடி 28 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீரர்களில் சிலர் ஓட்டமெதுவும் பெறாமலும் ஓரிரண்டு ஓட்டங்களைப் பெற்ற நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
றுசேல் 8 ஓவர்கள் பந்து வீசி 33 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் றுசேல் தெரிவானார்.
இதேவேளை இன்று நடைபெறவிருந்த அவுஸ்ரேலிய பங்களாதேஷ் போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது.