குறித்த ஆய்வரங்கிற்கான ஆக்கங்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் கோரப்பட்டுள்ளன.
யாழ்.பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் முகாமைத்துவ பீடாதிபதி தி.வேல்நம்பி ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
பல்கலைக்கழகமொன்று சமூகத்திற்கான அறிவியல் பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பது அதன் பொறுப்புக்களில் ஒன்றாகும். கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபடுவது மற்றும் சமூகத்துடன் ஒன்றித்த வகையிலான, பங்களிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கடப்பாடு காணப்படுகின்றது. இதனடிப்படையில் அறிவியல் விருத்திக்கு ஆய்வுகள் மேற்கொள்வது முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். இவ்வாறான ஆய்வு முயற்சிகளின் ஊடாக பிராந்திய மற்றும் தேசிய அபிவிருத்திக்கு அறிவு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக உற்பத்தி திறனை, மேம்படுத்த நவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் நிர்வாக முகாமைத்துவ ரீதியில் நிறுவனங்களை வலுவுட்ட திட்டங்கள் அல்லது கொள்கைகளை வகுக்க இவ் ஆய்வரங்கு வழிவகை செய்யும் என்பது திண்ணம். இதனடிப்படையில் சமகால முகாமைத்துவம் என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் கடந்த வருடம் தனது முதலாவது ஆய்வு, அரங்கினை வெற்றிகரமாக யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடம் தனது இரண்டாவது ஆய்வு அரங்கினை ஒழுங்கு செய்துள்ளது. இவ் ஆய்வரங்கு தொடர்ந்தும் அடுத்தடுத்த வருடங்களுக்கும் முன்னெடுத்துச் செல்லப்படும்.
இதேவேளை இவ்வாய்வு அரங்கிற்கான ஆய்வுக் கட்டுரைகளை கீழ்வரும் தலைப்புக்களில் ஆய்வாளர்கள் சமர்ப்பிக்கலாம்.கணக்கீடும் நிதியும்,
வங்கியியலும் காப்புறுதியும்,
வணிகப்பொருளியல்,
வணிகமும் சட்டசூழலும்,
கலாச்சாரமும் ஒழுக்கநெறிமுறைகளும்,
முயற்சியாண்மையும் செயற்பாட்டு முகாமைத்துவமும்,
நிறுவன நடத்தையும் மனிதவள முகாமைத்துவமும், தகவல் தொர்பாடலும் தொழில்நுட்பமும்,
சுகாதார முகாமைத்துவம்,
சர்வதேச வியாபாரமமும் நிதியும்,
அறிவு முகாமைத்துவம்,
சந்தைப்படுத்தல் விநியோக சங்கிலி,
முகாமைத்துவம்,
செயற்பாட்டு ஆய்வு,
பிராந்திய மற்றும் சமூக திட்டமிடல்,
தந்திரோபாய முகாமைத்துவம்,
சுற்றுலாத்துறை விருந்தோம்பல் மற்றும் நிகழ்வு,
முகாமை, நகர முகாமைத்துவம்,
சூழல் முகாமைத்துவமும் சமூகப்பொறுப்பும்
என்ற உப தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். என்பதுடன் உள் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ளவர்களும் தங்கள் ஆக்கங்களை சமர்பிக்கலாம்.
மேலும் தங்கள் ஆய்வுச் சுருக்கங்களை 20.03.2015ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும் படியும். சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு சுருக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அறிவித்தல் 25.03 2015ம் திகதி அறிவிக்கப்படும்.
ஆய்வு கட்டுரைகளை 10.04.2015ம் திகதிக்கு முன் னர் கையளிக்கவேண்டும் என்பதுடன் குறித்த கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அறிவித்தல் 30.04.2015ம் திகதி அறிவிக்கப்படும்.
இதேவேளை ஆய்வு அரங்கு பதிவுகள் 15.05.2015ம் திகதி இடம்பெற்று 11,12.06.2015ம் திகதிகளில் ஆய்வு அரங்கு நடைபெறும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சர்வதே ஆய்வு அரங்கு தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள பின்வரும் மின்னஞ்சல்கள் அல்லது இணையத்தள முகவரி ஊடாக, பெற்றுக் கொள்ளலாம்.
மின்னஞ்சல்:- iccmuoj@gmail.com, இணையத்தள முகவரி:- www.jfn.ac.lk/iccm
தொலைபேசி இலக்கம்:- 0212223610, 0777448352, 0777238282