Ad Widget

நியூசிலாந்து-இங்கிலாந்து போட்டியில் சாதனைகள்!

இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டியில் பல்வேறு சாதனைகள் தவிடுபொடியாகியுள்ளன. 123 ரன்களில் சுருண்ட இங்கிலாந்தை, 12.2 ஓவர்களிலேயே விரட்டி சென்று அடித்து பிடித்தது நியூசிலாந்து.

Cricket World Cup

இந்த போட்டியில் பேட், பந்து என பல்வேறு துறைகளிலும் சாதனைகளை பதிவு செய்துள்ளது நியூசிலாந்து.

இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த தோல்வி அவ்வளவு எளிதில் ஜீரணிக்க கூடியதாக இருக்காது. இந்த போட்டியில் நிகழ்ந்த சாதனைகள் குறித்த ஒட்டுமொத்த பார்வை:

மெக்கல்லம்

18 பந்துகளில் அரை சதம் அடித்து, உலக கோப்பை வரலாற்றில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீர்ர என்ற பெருமையை நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் பிரெண்டன் மெக்கல்லம் பெற்றார்.

ஸ்டிரைக் ரேட்டிலும் ஒரு சாதனை

உலக கோப்பையில் சிறப்பான பேட்டிங் ஸ்டிரைக் ரேட் வைத்த பேட்ஸ்மேன்களில் 2வது இடத்தை பிடித்தார் மெக்கல்லம். இவர் 25 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனபோது, பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 308.00-ஆக இருந்தது.

டிம் சவுத்தி டிம்சவுத்தி

33 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலக கோப்பை வரலாற்றில் 7 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில் 4வதாக இடம்பிடித்தார். முன்னதாக வின்ஸ்டன் டேவிஸ், மெக்ராத், ஆன்டி பிச்சல் ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.

நியூசிலாந்தில் சவுத்திதான் பெஸ்ட்

நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஒருவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுதான் முதன்முறை. அந்த சாதனைக்கும் சவுத்தி சொந்தக்காரர் ஆனார்.

7 சிக்சர் சாதனை

உலக கோப்பையில் சேஸ் செய்யும் அணி வீரர் ஒருவர் அடித்த அதிக சிக்சர் மெக்கல்லத்துடையது. அவர் 7 சிக்சர்கள் விளாசினார்.

ஏபிடிக்கு அடுத்து மெக்கல்லம்

ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே, 50 ரன்கள் அல்லது அதற்கும் மேல் ஸ்கோர் செய்த ஒரு பேட்ஸ்மேன் 300க்கும் கூடுதலான ஸ்டிரைக் ரேட் வைத்திருந்த சாதனையை பொறுத்தளவில் மெக்கல்லத்திற்கு 2வது இடம் (308 ஸ்டிரைக் ரேட்) கிடைத்துள்ளது. முதல் இடத்தில் 338.63 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் உள்ளார்.

சேசிங்கில் சாதனை

226 பந்துகள் மிச்சமிருந்த நிலையில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பையில் இது 10வது மிகப்பெரிய வெற்றியாகும். அதே நேரம், 120 அல்லது அதற்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்யும்போது இத்தனை பந்துகள் மிச்சமிருந்த வகையில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுதான் முதல் சாதனையாகும்.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்த அணி சார்பில் களமிறங்கிய எவரும் அரைச்சதம் கூட கடக்காத நிலையில் வரிசையாக வௌியேறினர்.

33.2 ஓவர்களை மாத்திரமே எதிர்கொண்ட இங்கிலாந்து 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக ரூட் (Joe Root) அதிகூடிய ஓட்டங்களாக 46 ஓட்டங்களை பெற்றார்.

இதனையடுத்து 124 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் களம் இறங்கிய நியூஸிலாந்து அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்த நிலையில் 125 ஓட்டங்களை பெற்று, 226 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுக்களால் வெற்றி வாகை சூடியது.

நியூஸிலாந்து அணி சார்பாக பிரண்டன் மெக்கலம் (Brendon McCullum) அதிகூடிய ஓட்டங்களாக 77 ஓட்டங்களை பெற்றார். இதில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடங்கும்.

இதேவேளை இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி நியூஸிலாந்தை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற சவுத்தி போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

Related Posts