பகிடிவதை காரணமாக மன உலைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ்.எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதுடன் அதில் தனது சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தனது பூதவுடலை பார்வையிடுவதற்கு அனுமதிக்க வேண்டாமென எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் தனக்குச் சொந்தமான காணியை அநாதை ஆசிரமத்திற்கு வழங்குமாறும் மாணவி தனது கடிதத்தில் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.