ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். திரிஷா, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்போது இந்த கூட்டணியில் காமெடி நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். இதை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திற்கு பிறகு ‘அப்பாடக்கர்’ படம் மூலமாக மீண்டும் விவேக்குடன் நடிக்கிறேன். இவர் இருந்தால் படப்பிடிப்பே கலகலப்பாக இருக்கும். அவரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடக்கவிருக்கிறது. இதில் ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லவிருக்கின்றனர்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.