முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால், யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகளின் குடும்ப விபரங்கள், தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்கள் என்பன தற்போது திரட்டப்பட்டுகின்றன.

இதற்கான படிவங்களை ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள கிராம அபிவிருத்தி அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்.

படிவங்களை உரியவர்கள் பூரணப்படுத்தி கிராம அபிவிருத்திச் சங்கத்திடம், அல்லது மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் உறுதிப்படுத்தி உடனடியாக ஒப்படைக்குமாறு வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளது.

Related Posts