அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 3 தொழிற்சாலைகள் தற்போது இயங்கி வருவதாக யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.சிவகங்காதரன் வெள்ளிக்கிழமை(13) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தரையில் பதிக்கும் சீமெந்து கல் தயாரிக்கும் தொழிற்சாலை, ஆணி, பிணைச்சல் உள்ளிட்ட மென் இயந்திரவியல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியன தொழிற்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் தற்போது 35 பேர் பணிபுரிந்து வருகின்றார்கள்.
பேப்பர், நைலோன் கயிறு, ஜாம், கோடியல் போன்றவை தயாரிக்கும் 12 தொழிற்சாலைகள் அனுமதி கோரியுள்ளன. அவற்றுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை பூர்த்தியானதும் இந்த தொழிற்சாலைகளும் இயங்கும் என அவர் கூறினார்.