வரவுசெலவு திட்ட சலுகைகள் வழங்கப்படாவிட்டால் முறைப்பாடு செய்யலாம்

இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சரியான முறையில் கிடைக்காமை தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யலாம்.

0112 399 146, 0771 088 922 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக ,இம்முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஆலோசனைக்கமைய இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts