இன்றைய தினம் காலையிலேயே உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் இடங்களிலிருந்து நீர் மாதிரிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
சுன்னாகம் பிரதேசத்தில் ஆரம்பித்த இந்த எண்ணெய் கசிவு எவ்வளவு தூரத்துக்கு பரவியுள்ளது என்பதையும் அதன் பாதிப்பையும் ஆராயும் பொருட்டே இந்தக்குழு நீரை சேகரித்து கொழும்புக்கு கொண்டு செல்கின்றனர்.
இலங்கை மின்சார சபைக்கு மின்சாரம் வழங்கிய நொர்தேன் பவர் நிறுவனத்தின், சுன்னாகத்தில் அமைந்துள்ள மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் விடப்பட்டமையால், சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு படிப்படியாக மல்லாகம், கட்டுவன், தெல்லிப்பழை என பல பிரதேசங்களுக்கும் பரவியது. இதனையடுத்து, இந்நிறுவனத்தை தற்காலிகமாக மூடும்படி மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.