சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இனிமேல் விநியோகிக்கப்படும் என்று நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டதரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் எந்தமொழியிலும் விடையளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டக்கல்லூரிக்கான பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்கவேண்டும் என்ற சட்டத்தை கடந்த அரசாங்கம் கொண்டுவந்திருந்தது. இதனால், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கல்விக்கற்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.