மின்கட்டணத்தை செலுத்துமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தல்

இதுவரையில் மின்கட்டண நிலுவை செலுத்தாமல் இருப்பவர்கள் தங்களுடைய மின்கட்டண நிலுவையை சனிக்கிழமை (31)ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் யாழ்.பிரதேச பொறியியலாளர் ச.ஞானகணேசன் வெள்ளிக்கிழமை (30) கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மின்கட்டண நிலுவையை செலுத்தாமல் பலர் உள்ளனர். அவர்கள் தங்களுக்குரிய மின்கட்டணத்தை விரைந்து செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் துண்டிக்கப்படும்.

இனிவருங்காலங்களில் மின்பட்டியலில் குறிப்பிட்டபடி மாதாந்தம் மின்கட்டணத்தைச் செலுத்தி சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கூறினார்.

Related Posts