என்னை அறிந்தால் படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டமாக பல தகவல்கள் உங்களுக்காக இதோ…
முதலில் கதாபாத்திரங்களாக அஜித், சத்யதேவ், சத்யா என இரண்டு கெட்டப்பில் வருகிறார். அதேபோல் த்ரிஷா ஒரு நடனக்கலைஞராக ஹேமானிகா என்ற பெயரில் அஜித்தின் ஜோடியாகவும், அனுஷ்கா ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பெண்ணாக தேன் மொழி என்ற கதாபாத்திரத்தில் அஜித்தை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டரில் வருகிறார்.
இதில் விவேக் அஜித்தின் நண்பராக படம் முழுவதும் நகைச்சுவை+குணச்சித்திர கதாபாத்திரத்தில் வருவாராம். மேலும், படத்தில் மிக முக்கியமாக விக்டர் என்ற கேரக்டரில் அருண் விஜய் வில்லனாக கலக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதையாக பார்த்தால், தன் மகன்(அஜித்) ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று ஆசைப்படும் தாய், அவன் என்ன ஆகிறான், அவன் வாழ் நாளில் யாரையெல்லாம் சந்திக்கிறான், எந்த மாதிரி பிரச்சனைகளை எதிர் கொள்கிறான் என 25 வயது முதல் 40 வயது வரையிலான ஒரு இளைஞனின் கதை தான் இந்த என்னை அறிந்தால்.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்ஸாக ஏற்கனவே படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்து விட்டது, இனி நாம் எதிர்ப்பார்க்க வேண்டியது படத்தின் பின்னணி இசை தான். மேலும், ‘ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜா, இந்திப்பட உலகின் கதாசிரியர், இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் படத்தில் பணியாற்றியது படத்திற்கு மேலும் பலம். கண்டிப்பாக என்னை அறிந்தால் தல ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் செம்ம விருந்து தான் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.