மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு இனி தடை

பாடசாலைகளின் தேவைகளுக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதனை உடன் அமுலுக்குவரும் வகையில் தடைவிதிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பாடசாலை அபிவிருத்திக்காக பழைய மாணவர் சங்கம், வகுப்பு நலன்புரி சங்கம் ஆகியவற்றினூடாக அறவிடப்படும் அனைத்து அறவீடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்று நிருபம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts