ஜனவரி 14ம் தேதி வெளியான ஐ இரண்டு வாரங்கள் கழித்து தற்போதும் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஐ வசூல் கண்டிப்பாக 200 கோடி ரூபாயை தொட்டுவிடும் என்று பலர் தெரிவித்து வந்தனர்.
இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 கோடி ரூபாய் வரை வசூலைக் குவித்திருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சுமார் 40 கோடி ரூபாயும், கேரளாவில் 15, கர்நாடகாவில் 12, மற்ற மாநிலங்களில் 5 கோடி ரூபாயும், பிற நாடுகளில் 40 கோடி ரூபாயும், ஹிந்தி மொழி வெளியீட்டில் 20 கோடி ரூபாயும் என மொத்தமாக 197 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்திரன் படத்திற்கு பிறகு அதிக வசூலைக் குவிக்கும் ஒரே படம் என்ற பெருமையை ஐ படம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் அதிக வசூல் என்று சொல்லப்பட்ட கத்தி படத்தின் வசூலையும் மிஞ்சி புதிய சாதனையை ஐ படம் படைத்து வருகிறது.