பொருளாதார அமைச்சின் 16,700 பேருக்கு வேறு சேவைத் துறைகள் அல்லது இடமாற்றம்!

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றும் 16 ஆயிரத்து 700 பேரை வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க அல்லது இடமாற்றம் வழங்க நடவடக்கை எடுக்கப்படுகின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் டாக்டர் ஹர்ச டி சில்வா தெரவித்தார்.

Dr Harsha de Silva

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

பட்டதாரிகளான இவர்கள் மாதாந்தம் 28 ஆயிரம் ரூபா சம்பளம் எடுத்துக் கொண்டு சிறு வேலைகளையே செய்கின்றனர். ” இவர்கள் புத்தகம் வாசிப்பதிலும் சும்மா இருத்தலிலுமே அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.” எனவேதான் இவர்களின் சேவை துறைகளை மாற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது – என்றார்.

மேலும் இவர்களைக் கொண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ முயன்று வருகின்றார் என்றும் அவர் கூறினார்.

Related Posts