ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் சினிமாவில் அறிமுகமாகி, இன்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனுக்கு நேற்று (28-1-2014) பிறந்த நாள். இந்த நாளை அவர் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார்.
பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட கலைஞர் ஸ்ருதிஹாஸன்.
மிக இளம் வயதிலேயே, தன் தந்தையின் உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.
ஆரம்பத்தில் லக், ஏழாம் அறிவு போன்ற படங்கள் அவருக்கு கைகொடுக்காவிட்டாலும், பின்னர் அவர் நடித்த தெலுங்கு, இந்திப் படங்கள் சக்கைப் போடு போட ஆரம்பித்துவிட்டன.
கவர்ச்சி, நடிப்பு, சர்ச்சை என எதிலுமே குறை வைக்காத நடிகை ஸ்ருதி. இன்று இந்திய சினிமாவில் இயக்குநர்களால் அதிகம் தேடப்படும் நடிகை ஸ்ருதிதான்.
தன் பிறந்த நாளையொட்டி, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “எனது ரசிகர்கள் தாங்கள் செய்துள்ள நல்ல விஷயங்கள் பற்றி தெளிவாக எனக்கு மெயில் அல்லது சமூக வலைத் தளத்தில் செய்தி அனுப்புங்கள்.
அவற்றில் சிறந்த 5 மெயில்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு எனது புகைப்படத்துடன் கூடிய ஆட்டோகிராப் அனுப்புவேன். இவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தியும் உண்டு,” என்று கூறியுள்ளார்.