முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற வளாகத்துக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார். அவரை, சட்டத்தரணிகள் பூச்செண்டுகொடுத்து வரவேற்றனர்.
தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் இடம்பெற்ற நிலையில் சிராணி பண்டாரநாயக்க சற்று முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்துளளார்.
இதேவேளை சிராணி பண்டாரநாயக்க மீது குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்டு அவர் பதவி நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும், அதன் அடிப்படையில் தொடர்ந்தும் அவரே பிரதம நீதியரசர் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக கடமைகளை பொறுப்பேற்பார் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சிராணி பண்டாரநாயக்க மீது குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்டு அவர் பதவி நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும், அதன் அடிப்படையில் தொடர்ந்தும் அவரே பிரதம நீதியரசர் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.