மூத்த நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்!

வைரமாலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 1954ல் அறிமுகமான பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், இதுவரை சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

vs_raghavan001

அந்த கால எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் இந்த கால அஜீத், விஜய் வரை இவர் சுமார் 60 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் நடித்து வந்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.

அவருக்கு வயது 90.”வி.எஸ்.ராகவனின் இழப்பு திரைப்படத் துறைக்கும், கலைத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு” என்று தன்னுடைய அஞ்சலி செய்தியில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது உடல், மந்தைவெளி ராமகிருஷ்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. திரையுலகினர் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

Related Posts