என்னுடைய மாதந்த சம்பளம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை நான் பெறமாட்டேன். அவற்றை வீடு அபிவிருத்தி நிதியத்தில் வைப்பிலிடுவேன் என்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் தன்னுடைய கடமைகளை நேற்று வியாழக்கிழமை (22) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நல்லாட்சிக்கு முன்மாதிரியாகவே இதனை நான் மேற்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்கு சமய அனுஷ்டானங்களை மேற்கொண்ட கோட்டே நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரர், சஜித் பிரேமதாஸவுக்காக அதிநேரம் பிரீத் ஓதவேண்டிய தேவையில்லை என்பதுடன் தந்தையை போல செயலாற்றுமாறு ஞாபகப்படுத்துகின்றேன் என்றும் அவர் கூறினார்.