பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் 28ஆம் திகதி வரை மட்டுமே!

2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது.

எனவே தமது பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவோர் உடனடியாக தத்தமது விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகிறன்றனர்.

இம்முறை மேற்படி பரீட்சைக்கு 2 இலட்சத்து 96ஆயிரத்து 313 பேர் தோற்றினர்.

Related Posts