கூடிய விலையில் எரிபொருள் விற்பனை செய்தால் முறைப்பாடு செய்யலாம்

எரிபொருள் விலை குறைப்பின் பின்னர், கூடிய விலையில் எரிபொருள் விற்பனை செய்யும் சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றால், அது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் மின்வலும் மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று கேட்டுக்கொண்டுள்ளது.

அவசர தொலைபேசி இலக்கம் – 0115 243 243 அல்லது தொலைபேசி இலக்கங்கள் – 0115 455 130, 0115 455 251, 0115 455 254 அல்லது தொலைநகல் – 01156 455 431, 0115 455 411 மூலமாக அறிவிக்க முடியும் என்று மின்வலும் மற்றும் எரிசக்தி அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Related Posts