அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. விளம்பரங்களும் வந்தன. ஆனால் பொங்கலுக்கு வரவில்லை. தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் ரிலீசாகவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
வருகிற 29–ந்தேதி படம் ரிலீசாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர். ரசிகர்கள் அன்றைய தினம் படம் வரும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். ஆனால் ‘என்னை அறிந்தால்’ பட விளம்பரங்களில் விரைவில் படம் ரிலீசாகும் என்றே குறிப்பிடப்படுகிறது. தேதி இடம் பெறவில்லை.
எனவே படம் மீண்டும் தள்ளிப் போகலாம் என வதந்தி பரவி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்னை அறிந்தால் பட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘என்னை அறிந்தால்’ படத்தின் இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஜனவரி 21–ந்தேதி படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். வருகிற 29–ந்தேதி நிச்சயம் படம் ரிலீசாகும் என்றார்.
‘என்னை அறிந்தால்’ படத்தில் நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடித்துள்ளனர். கவுதம்மேனன் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.